வலைப்பதிவு நண்பர்களுக்கு வணக்கம்.
இதுவரைக்கும் தமிழ்வலைப்பதிவு உலகத்தில் ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்த நான், வலைப்பதிவு நண்பர் ஒருவரோட தூண்டுதலால இன்று முதல் உங்க எல்லாரையும் என் எழுத்துக்கள் மூலம் இம்சிக்க புறப்பட்டுட்டேன்.
புதுசா வலைப்பதிவில் சேர்ந்திருக்கும் எனக்கு கிடைக்கப்போகும் வரவேற்புகள் மற்றும் விமர்சனங்கள் குறித்து ரொம்ப ஆவலா இருக்கு. ஏன்னா, இதுக்கு முன்னாடி நான் ஒரு சின்ன புத்தகம் எழுதினப்ப எனக்கு எங்கள் வீட்டில கெடச்ச வரவேற்பு ஆஹா.. ஓஹோவென இருந்துச்சு. இதோ.. அதைப் பற்றிய சிறிய குறிப்பு:
இடம்: சமையலறை
கதாபாத்திரங்கள்: நித்யா, நித்யாவின் அம்மா, நித்யாவின் சித்தி
நித்யா: அம்மா, இன்னொன்னு சொல்ல மறந்துட்டேனே.... எனக்கு ஒரு புக் எழுத சான்ஸ் கெடச்சிருக்கு. பெரிய பப்ளிஷிங் கம்பெனி அம்மா. எழுதி தரச் சொல்லி இருக்காங்க.
அம்மா: ம்ம்....
நித்யா: என்னம்மா, அவ்ளோ தானா response? நம்ம வீட்டுல இதுக்கு முன்னாடி யாராவது எழுத்தாளர் இருக்காங்களா? குடும்பத்துலயே First-time-a நான் புக் எழுதப்போறேன்னு சொல்றேன்...இப்படி சுரத்தே இல்லாம பதில் சொல்றயே...
அம்மா: இங்க நம்ம வீட்டு கதயே பெரிய கதயா இருக்கு. அதயே ஒரு புக்கா போடலாம்.
நித்யா: ஐயோ... அம்மா. நீ நினைக்கற மாதிரி இல்லம்மா. இது குழந்தைகளுக்கான புக் அம்மா. எல்லாருக்கும் எழுதற சான்ஸ் கெடச்சிடாது.
சித்தி (வாழ்க்கைல ரொம்ப கஷ்டபட்டவங்க): நான்கூட ரொம்ப நல்லா எழுதுவேன். என் கதயே பெரிய புக்கா வரும். எழுதி தரேன்; போடராங்களான்னு கேளு
நித்யா: ஐயோ...அதில்ல சித்தி.....அப்படி பாத்தா எல்லாருமே அவங்வங்க life-story-a ரொம்ப நல்லா எழுதுவாங்க. இது ரொம்ப கஷ்டம் தெரியுமா.. சும்மா நீங்க நினைக்கற மாதிரி இல்ல.
சித்தி: என் கதய புக்-கா போட்டா எல்லாருக்கும் இன்ஸ்பிரேஷனா இருக்கும். புக் நல்லா விக்கும். படிக்கறவன் எல்லாம் இதுக்கு நம்ம கஷ்டம் தேவலாம்னு நினைக்க ஆரம்பிச்சுடுவான்
நித்யா: என்ன சித்தி இது? நான் என் புக் பத்தி சொன்னா ஏதேதோ பேசிட்டு இருக்கீங்க? உங்க பொண்ணு புக் எழுதறது பத்தி உங்களுக்கு பெருமையா இல்லையா?
அம்மா: அத விடு. ராத்திருக்கு டிபன் மட்டும் போதுமா? சாதமும் சாப்பிடுவயா?
நித்யா: அம்மா.... என்னம்மா நீ? புக் பத்தி ரியாக்ஷனே காட்ட மாட்டேங்கற?
சித்தி: உங்கம்மாவ விடு.. என் புக் பத்தி கேட்டு சொல்றயா?
நித்யா: (மனதிற்குள்)ஆஹா.... கொஞ்சம் பந்தா பண்ணலாம்னா விட மாட்டாங்க போல இருக்கே. ரெண்டு பேரோட ரியாக்ஷனுமே சரி இல்லையே. புக் மட்டும் வரட்டும். அப்பறம் கவனிச்சிக்கறேன்...
சித்தி: என்ன திரு திருன்னு முழிக்கற? கேட்டு சொல்றயா இல்லையா?
நித்யா: (மனதிற்குள்... "ஆஹா... இது வேலைக்கு ஆகாது.. எஸ்கேப்........) சித்தி... பாட்டி கூப்பிடற மாதிரி இருக்குல்ல... என்னன்னு கேட்டுட்டு வரேன்...
சித்தி: பாட்டி கோவிலுக்கு போயாச்சு. நீ இங்க வா...
நித்யா: இல்ல இல்ல பாட்டி தான் கூப்பிடறமாதிரி இருக்கு.. நான் போயி பார்க்கறேன்....
ம்ம்ம்.... இது தாங்க முதல் எழுத்துப்பதிவுக்கு எனக்கு கெடச்ச ரியாக்ஷன். அதனால, இதுல பந்தா ஏதும் பண்ணாம, பில்ட் அப் ஏது கொடுக்காம... வலைப்பதிவ ஆரம்பிச்சு முதல் பதிவும் போட்டாச்சு.
படிச்சுட்டு உங்க விமர்சனங்கள சொல்லுங்க....
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
HEY HurrayyyY!!! WAY TO GO YAAR!! U talk a lot. Share a lot. U DESERVE TO START ONE. Post everything u come across as interesting, hilarious, mind-goggling. keep on low profile on politics and sensitive issues.
Abt ur mothers reaction : she may be xpecting more out of u. not just a book. but way to start with.
U got a long way to go. THUMBS UP!!
வாங்க வாங்க பதிவுலகத்துக்கு !!
//நித்யா: என்ன சித்தி இது? நான் என் புக் பத்தி சொன்னா ஏதேதோ பேசிட்டு இருக்கீங்க? உங்க பொண்ணு புக் எழுதறது பத்தி உங்களுக்கு பெருமையா இல்லையா?
அம்மா: அத விடு. ராத்திருக்கு டிபன் மட்டும் போதுமா? சாதமும் சாப்பிடுவயா//
:)))
முதல் போஸ்டே கலக்கல்..நல்லா இருக்குங்க...தொடர்ந்து எழுதுங்க..:))
Bull on Prowl,
Thanks for your comments. Its really encouraging. Regarding my mom's reaction, she later on congratualated and encouraged me. I left all those things, just to make it funny. Do visit my page regularly :-)
Dubukku,
Thanks-ngo. Periyavanga vaazhthu solreenga :P romba tx-nga
ஹாய் நித்யா,
இப்ப தான் உங்க முதல் போஸ்ட் படிச்சேன். ம்ம்..கலக்கலா தான் இருக்கு...மேலே ஏன் தொடரலை?
நிறைய்ய போடுங்க படிச்சுட்டு கமெண்ட தான் நாங்கல்லாம் இருக்கோமே..ஹி ஹி ஹி ஹி...
வாழ்த்துக்கள்!
உங்க பதிவுக்கு பின்னூட்டம், ரெஸ்பான்ஸ் நிறய வரணும்னு எதிர்பார்க்காதீங்க. அப்படி எதிர்பார்த்தால் உங்களோட ஒரிஜினாலிட்டிய இழந்துடுவீங்க. சரியா?.
நல்ல பதிவுகளா தேடிப்பிடிச்சு படிச்சு மறக்காமல் பின்னூட்டம் போடுங்க. அவங்களுக்கும் உங்க பதிவு புடிச்சிருந்தா கண்டிப்பா பின்னூட்டம் போடுவாங்க.
இங்கும் உங்க அம்மா மாதிரி நிறய பேரை பார்க்கலாம். ஆனல் அவங்கள குறை சொல்றது நம்ம வேலை இல்லை.
இவ்ளோ அட்வைஸ் போதுமா?. சரிசரி, அப்படியே என்னோட பிளாக் பக்கம் அப்பப்ப வந்துட்டு போங்க!!
Post a Comment